
இதுகுறித்து எம்எல்ஏ சம்பத்குமார் கூறுகையில் 2019 சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்ட போது அவரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிச்சாமி நீண்ட நாள் கோரிக்கையான அரூர் தொகுதி முக்கிய நீர் பிரச்சினை குமரன் அணைக்கட்டு, சென்னாக்கள், கே. ஈச்சம்பாடி அணைக்கட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
நான் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்று முதல் கன்னிப் பேச்சியில் அரூர் தொகுதி மாம்பட்டி குமரன், கே.ஈச்சம்பாடி, அணைக்கட்டு, சென்னாக்கள் நீரேற்றம், கே.ஈச்சம்பாடி திட்டங்கள் குறித்து பேசினேன். பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி குமரன் அணைக்கட்டு ரூ.4.48 ஒதுக்கீடும், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு ரூ10 லட்சம் நிதியில் ஆய்வு மேற்கொண்டு மறு அளவீடு செய்து கூடுதல் நிதியாக ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னாக்கள் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 2021 இல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் நான் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றுள்ளேன். தற்பொழுது குமரன் அணைக்கட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளதாகவும், சென்னாக்கள் நீரேற்றம் திட்டம் ஆய்வில் உள்ளதாகவும் திமுக தவறான தகவல் தெரிவித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
.gif)

