Type Here to Get Search Results !

முட்புதரில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கி மீட்பு .


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள  முட்புதரில் நாட்டுத் துப்பாக்கி  இருப்பதாக ஜெர்தலாவ்  வி.ஏ.ஒ. வடிவேல் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை மீட்டு, பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர், அதில் பாலக்கோடு சுற்று வட்டார  பகுதியானது வனப்பகுதி என்பதால் இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாட இவ்வகை துப்பாக்கிகளை சிலர் பயன்படுத்தி வருவதாகவும்,   யாருக்கும் தெரியாமல் இருக்க முட்புதரில்  மறைத்து வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.


இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies