தேசிய நெடுஞ்சாலைகளில், பெங்களூரு – கன்னியாகுமரி நெடுஞ்சாலை மிகவும் பரப்பரப்பான சாலைகளில் ஒன்றாகும். இச்சாலை 2010 ஆம் ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பெங்களூரு – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 161.0 கி.மீ முதல் 161.4 கி.மீ வரையிலான தொப்பூர் மலைப்பகுதி சாலை கடுமையான வளைவு மிகுந்த சாலையாகும். சாலையில் அடிக்கடி அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்த வளைவுச் சாலை பகுதி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு மரண பொறியாக அமைந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான சாலை போக்குவரத்து விபத்துக்கள் இங்கு ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக விபத்துக்கள் குறைந்தபாடு இல்லை. விபத்துக்களால் பெரிய அளவிலான பலத்த காயங்கள், உடல் உறுப்பு இழப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. விபத்துக்கள் ஏற்பாட்டால் பல கி.மீ வாகனங்கள் அணிவகுத்து சாலையில் நிற்கின்றன. துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விபத்துக்கள் குறையவில்லை.
நெடுஞ்சாலைகளில் மற்ற பகுதிகளை விட ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. இப்பகுதில் மோசமாக அமைக்கப்பட்ட சாலையை ஆராய்ந்து சாலையில் விபத்துக்களை குறைக்க, சாலையை மறுவடிவமைப்பு செய்து பயணத்திற்கு பாதுகாப்பான வகையில் செயல்படுத்த திட்ட மதிப்பீடு ரூ.435 கோடியில் தயாரிக்கப்பட்ட புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
உடன், சேலம் மேற்கு தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், பாமக மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
.gif)

