தருமபுரி அருகே அதகப்பாடி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது, மூன்றாம் தேதி சாமி ஜம்பு நிகழ்ச்சியும், 4 -ம் தேதி தீமிதித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து கரக வேடிக்கை நிகழ்ச்சி மற்றும் செல்லியம்மன் பட்டாளம்மன் அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9-ம் தேதி விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சியும், 10-ம் தேதி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேர் இழுத்தல் நிகழ்ச்சி மங்கல வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது.
இதில் அதகப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை பந்தகாசி நிகழ்ச்சியோடு கோயில் விழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்,
.gif)


