தருமபுரி நகரில் தினங்களாக டிப்டாப்பாக உடையணிந்த நபர் ஒருவர் தருமபுரி நகர் பகுதியில் பெண்கள் தனியாக இருக்கும் கடைகளை நோட்டமிட்டு, கடைக்குள் சென்று உங்கள் கடை உரிமையாளர் எனது நண்பர் தான், அவர் இல்லையா? எப்போது வருவார் என கேட்டு, என்னிடம் மொபைல் இல்லை, அவருக்கு கால் செய்யமுடியுமா என கேட்டு தொலைபேசியை வாங்கிக்கொண்டு அப்படியே அங்கிருந்து சென்றுவிடுவார்.

இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவது நகர் பகுதி வணிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த டிப்டாப் நபரை குறித்தோ அல்லது அவரை கண்டாலோ அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி வணிகர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
.gif)

