Type Here to Get Search Results !

வீட்டுமனை பட்டா வேண்டி மனு, கோரிக்கை நிறைவேற்ற விட்டால் வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த கிராமமும் புறக்கணிக்க முடிவு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் சக்கிலி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 


அதில் தங்கள் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதாகவும். பல ஆண்டுகளாக அரசிடம் பட்டா வேண்டி பலமுறை மனு அளித்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த கிராம மக்கள் தொடர்ந்து வருவாய்த் துறையினர் வனத்துறைக்கு சார்ந்து இடங்களில் பட்டா வழங்க முடியாத என தெரிவித்ததாகவும். 


அப்படி என்றால் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசு பள்ளிக்கூடம் சாலை வசதி மின்சார வசதி வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பினர் தொடர்ந்து செய்தியாளரிடம்   பேசிய கிராம மக்கள் சொந்த நாட்டில் இருந்தும் அகதிகள் போல வாழ்ந்து கொண்டிருப்பதாகவும். 


மாவட்ட நிர்வாகம் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் இல்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்த கிராமமும் கருப்பு கொடி ஏந்தி புறக்கணிக்க போவதாகவும். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை எனவும் அரசு வழங்கிய ஆதார் கார்டு ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies