
இந்நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், தீவிர முயற்சி மேற்கொண்டு மத்திய வனத்துறை, சுற்றுசூழல் துறை, பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட 6 துறைகளின் அனுமதி பெற்று மலை அடிவாரத்தில் இருந்து கோட்டூர் மலைமுகடு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அகன்ற சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து கோட்டுர் மலை கிராம மக்களை சந்தித்து அனுமதி கிடைத்த விவரத்தையும் விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக கிராம மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் மேளதாளம் முழங்க பூர்ணகும்ப மரியாதை அளித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வட்டுவன ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், மடம் முருகேசன், சபரி, மேற்கு மாவட்ட இளைஞர் அணி மகேஷ்குமார், கவுன்சிலர் முத்துசாமி மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

