Type Here to Get Search Results !

பாலக்கோடு கல்கூடஅள்ளி கிராமத்தில் ஸ்ரீ புள்ள முனியப்பன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கல்கூடஅள்ளி கிராமத்தில் எழுந்தருளிய ஸ்ரீ புள்ள முனியப்பன் கோவில் திருவிழா  இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இதில் கல்கூட அள்ளி, சின்ன செட்டிப்பட்டி, எம்.செட்டி அள்ளி, காவேரியப்பன் கொட்டாய், குப்பன் கொட்டாய், எருதுகூட அள்ளி, பாகிமரத்துக்கொட்டாய், சென்னப்பன் கொட்டாய் உள்ளிட்ட 9 கிராமத்தை சேர்ந்த பங்காளிகள் ஒன்றினைந்து முனியப்பன் சுவாமிக்கு முப்பூசை செய்து விழாவினை தொடங்கி வைத்தனர்.


அதனை தொடர்ந்து முனியப்பன் சுவாமிக்கு பல்வேறு திரவங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார், இதை அடுத்து சுவாமிக்கு பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies