Type Here to Get Search Results !

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் வானவில் மன்ற கருத்தாளர்கள் சார்பாக ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது.


பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் வானவில் மன்ற கருத்தாளர்கள் மூலமாக கோடை விடுமுறையில் குழந்தைகள் மத்தியில் அறிவியல் கருத்துக்களையும், கணித புதிர்களையும் முறையில் கொண்டு சேர்க்க மாநிலம் முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சபரிநாதன் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தலைமையாசிரியர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மா. பழனி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்னும் அடிப்படையில் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் கருத்துக்களையும் கணித தத்துவங்களையும் கொண்டு சேர்க்கும் விதமாக ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  

கோடை விடுமுறையில் குழந்தைகள் பயனுள்ள வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எளிய அறிவியல் பரிசோதனைகள் மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை உண்டாக்கும் விதமாக பயிற்சி அளிக்கப்பட்டது அனைத்து குழந்தைகளையும் கவர்ந்தது.  வானவில் மன்ற கருத்தாளர்கள் நவீனா, பவதாரணி, மாமரத்துப்பள்ளம் தலைமை ஆசிரியர் மணி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கோகிலா உமாபதி செல்வராணி தீபிகா தமிழரசி புனிதாமணி சுமதி தெய்வராணி ஜெயக்கொடி மற்றும் தற்காலிக ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies