Type Here to Get Search Results !

மொரப்பூர் பகுதி ஊராட்சிகளில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது


தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது தர்மபுரி மே 1 உலக தொழிலாளர் தினத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றன.

தர்மபுரி மாவட்டத்தில் கீழ் மொரப்பூர் ஊராட்சி மத்தியபட்டி ஊராட்சி மருதிப்பட்டி ஊராட்சி மாம்பட்டி ஊராட்சி கொங்கவேம்பு ஊராட்சி போன்ற பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் வரவு செலவு எதிர்கால திட்டங்கள் மற்றும் தொகுப்பு வீடு குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இக்கூட்டத்தில் பல்வேறு அரசு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டன இந்நிகழ்வில் மொரப்பூர் வனச்சரகத்தில் இருந்து கலந்துகொண்டு வனங்களை பாதுகாத்தல் உருவாக்குதல் வனத்துறையில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்து கருத்துரை வழங்கினர்.


மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் கீழ் மொரப்பூர் ஊராட்சி தலைவர் அம்பிகாபதி கொங்க வேம்பு ஊராட்சி மன்றத் தலைவர் விஜயா சொக்கலிங்கம் மற்றும் இதில் சமூக ஆர்வலர்கள் கிராம இளைஞர்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies