தர்மபுரி நகராட்சி துவக்கப்பள்ளியில் கலை பண்பாட்டு துறை ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடைக்கால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. தர்மபுரி மீனாட்சி நாராயணா திருமண மண்டபம் அருகே நகராட்சி தொகுப்பு பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஜவகர் சிறுவர் மன்றம் சிறார்களுக்கான இலவச கோடை கால பயிற்சி நடைபெற்றது. இதில் சிலம்பாட்டம், ஓவியம், பரதநாட்டியம் ஆகியவற்றிற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளான குமாரசாமிபேட்டை, காந்திநகர், எம்ஜிஆர் நகர், அப்பாவு நகர், அண்ணா நகர், கடைவீதி, விருபாட்சிபுரம் போன்ற பகுதியிலிருந்து சுமார் 300 மாணவ மாணவிகள் பயிற்சியில் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் ஆசிரியர் ராஜா வரவேற்புரை ஆற்றினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். ஓவிய ஆசிரியர் இசக்கி, மல்லர் கம்பம் ஆசிரியர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
.gif)

