தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் மக்களை தேடி மருத்துவ சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது. இதில் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களின் வீடுகள் தோறும் சென்று ஒவ்வொரு வீட்டில் உள்ள முதியவர்கள் இளைஞர்கள் பெண்கள் என ஒவ்வொரு தனி நபருக்கும் சிறப்பு மருத்துவ சேவை மூலம் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் கேன்சர் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தும் விதமாக மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.


இந்த சிகிச்சையின் மூலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களிலிருந்து விடுபட பேரூராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படுத்தப்படும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் டார்த்தி மருத்துவர் நவீன், இளங்கோ, சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.