Type Here to Get Search Results !

தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில், தருமபுரி பிர்காவிற்கு உட்பட்ட  வட்டத்தின் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் வெள்ளேகவுண்டன்பாளையம், விருப்பாட்சிபுரம், கடகத்தூர், அதகப்பாடி, அன்னசாகரம் உள்ளிட்ட 16 கிராம மக்கள் கலந்து கொண்டனர். 


பட்டா மாற்றுதல், முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டுதல், ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான பிரச்சினைகளுக்கு இந்த ஜமாபந்தியில் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் நில அளவை அலுவலர்களிடம் நில அளவை சம்பந்தப்பட்ட  எழுப்பபட்ட  கேள்விக்கு நில அளவை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளித்தனர்.  


இந்த ஜமாபந்தியில் தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் நில அளவை அலுவலர்கள்  கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் விரைவில் தீர்வு காண கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies