Type Here to Get Search Results !

தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி தமிழ் மன்றம் சார்பில் "நெல்லிக்கனி" பேரவை நிறைவு விழா.


தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி தமிழ் மன்றம் சார்பில் "நெல்லிக்கனி" பேரவை நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சுமதி அவர்கள் தலைமையேற்று தமிழ் மொழி சிறப்புகள் குறித்தும், தமிழர்கள் பண்பாடு வாழ்வியல் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தமிழக அரசு சார்பில் உயர்கல்வித்துறையில் பொறியியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மரபு மற்றும் தமிழ் கட்டடக்கலை மற்றும் தொழில்நுட்பவியல் குறித்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி அரசு கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் கு. சிவப்பிரகாசம் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இலக்கியங்களின் வாயிலாக தமிழர்களின் மரபு பண்பாடு கலாச்சாரங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கவுரை ஆற்றினார். தமிழ் மொழியினை காப்பது என்பது தமிழர் இனத்தை காப்பதற்கு சமம் என்றும் தமிழ் மொழியின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல அனைவரும் உறுதி எடுப்போம் என்று சிறப்புரை ஆற்றினார்.


தமிழ் மன்றம் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி,  கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா, பட்டிமன்றம், கதைச்சொல்லுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ப. பிரேம்குமார் மற்றும் மன்ற உறுப்பின மாணவர்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies