Type Here to Get Search Results !

தகடூர் அதியமான் வரலாற்று சங்க ஆண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்.


தகடூர் அதியமான் வரலாற்று சங்கம், தருமபுரி ஆண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் தருமபுரி அகழ்வைப்பகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது,

  1. வரலாற்றில் தகடூர் நாடு என்னும் நூலை புதுப்பித்து விரிவாக்கி வெளியிடல் ஆதனூர் கல்வட்டம் திருமால்வாடி குத்துக்கல் வேதம்பட்டி புதிர் நிலை ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களாக அறிவிக்க கோருதல் ஜூலை மாதம் ஓசூரில் நடைபெறும் தொல்லியல் கழகத்தின் ஆவணம் நிகழ்வில் கலந்து கொள்ளுதல். 
  2. குமுதம் இணையஇதழில் தொல்லியல் நிகழ்ச்சி நடத்துதல் ஆர் பாலகிருஷ்ணன் இடைநிலை  ஆட்சியர் பா அவர்களின் ஒரு பண்பாட்டின் பயணம் நூல் தொடர்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடத்துதல் தொல்லியல் சுற்றுலாவை மீண்டும் நடத்துவது.
  3. பள்ளி கல்லூரி மாணவர்களை தருமபுரி அகல் வைப்பகத்திற்கு வந்து செல்ல ஆவண செய்ய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் முனைவர் பி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் மருத்துவர் ரா செந்தில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், பொருளாளர் வெ. ராஜன், துணைத் தலைவர் ரா. சிசுபாலன், தலைமையாசிரியர் கூத்தப்பாடி பழனி அவர்கள், கோவிந்தசாமி ஆசிரியர், தமுஎகச மாவட்ட தலைவர்  சிங்காரவேல், மு.கார்த்திகேயன், கவிஞர் சம்பத், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக  அறிவுடைநம்பி நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies