Type Here to Get Search Results !

தருமபுரி அரசு ஊழியர் சங்க அமைப்புதின கொடியேற்று விழா, கருத்தரங்கம்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40 -வது அமைப்பு தின மாணிக்க விழா தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது, மே 6, ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40 - ஆம் ஆண்டு அமைப்பு தினம், மாணிக்க விழாவையெட்டி சங்கத்தின் கொடியேற்றுவிழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவிற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் தலைமை தாங்கினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடியினை மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் அவர்களும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன கொடியை மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் அவர்களும் ஏற்றி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில்மாவட்ட நிர்வாகி  கே.புகழேந்தி விமலன், கார்த்திக் செல்வம், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

பென்னாகரம் வட்டத்தில் சங்கத்தின் வட்ட செயலாளர் வேலவன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் சார்நிலை கருவூல அலுவலகம் ஆகிய  இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள் நாகராஜன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் யாரப் பாஷா, வட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


பாலக்கோடு வட்டத்தில், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவகம், பேரூராட்சி அலுவலகம், உள்ளிட்ட அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் மாணிக்கம் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், தமிழ் செல்வன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


காரிமங்கலம் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க கொடியேற்றப்பட்டது, வட்டத் தலைவர் தேவகி, வட்ட செயலாளர் சென்னப்பன், மாவட்ட பொருளாளர் இளவேனில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அன்று மாலை 05.00 மணிக்கு தருமபுரி CITU கூட்டரங்கில் அமைப்புதின கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் M. சுருளிநாதன் தலைமையில் நடைபெற்றது.


அனைவரையும் வரவேற்று மாவட்ட செயலாளர் A.சேகர் பேசினார், "போராட்டங்கள் பலமானால் மட்டுமே உரிமைகள் நம் வசமாகும்" என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் G. பழனியம்மாள் மற்றும் தமிழ்நாடு பொதுநூலகத்துறை அலுவலர் சங்கதின் மாநில தலைவர் P. பிரபாகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.


இக்கருத்தரங்கில் மாவட்ட துணைத்தலைவர்கள் T.சண்முகம், C. காவேரி, S. குணசேகரன், மாவட்ட இணை செயலாளர் P. மகேஸ்வரி, வட்ட நிர்வாகிகள் அன்பழகன், குமரன், முருகன், தேவகி, நூலகத்துறை சங்கத்தின் முன்னாள் மாநில பொதுசெயலாளர் சரவணன் முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies