இந்த உண்ணாவிரதத்துக்கு தர்மபுரி மாது, சேலம் ராமாயி, கிருஷ்ணகிரி தமிழரசி மற்றும் திருவண்ணாமலை செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாநில தலைவர் சிவப்பிரகாசம் துவக்க உரையாற்றினார். சேலம் செல்வம், தர்மபுரி சேரலாதன், கிருஷ்ணகிரி கந்தசாமி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். தொடர்ந்து சந்திரசேகரன், ராஜா, துரை, ரகுநாதன், ராஜேஸ்வரி, தேன்மொழி, ரமேஷ், கோபிநாத், ஜெகதீஸ்வரி, ராமலிங்கம், மனோகரன், சின்னசாமி, முனியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்ற, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி நன்றி உரையாற்றினார்.


இந்த உண்ணாவிரதத்தில் திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை வழங்கிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்திடும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதிய குழு அறிக்கையின் அடிப்படையில் நிலுவையில் உள்ள அரசாணைகளை வெளியிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.