Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல். தினறும் காவல்துறை .


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புறநகர் பேருந்து நிலைய  சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. 


மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில்  இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதாலும் பேருந்து நிலையம் முன்பு சாலையோர நடைபாதை கடைகள், வணிக கடைகள் முன்பு பந்தல் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. மேலும் பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை வரும்போது மேலும் கூட்ட நெரிச்சல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை தினறி வருகிறது, எனவே மாவட்ட நிர்வாகம்  துரித நடவடிக்கை மேற்கொண்டு  ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த  வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies