
இந்த நிலையில் தர்மபுரி பாரதிபுரத்தில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் புதிய பேராலயத்தில் புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு திருப்பலி மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு திருப்பலியில் மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களின் தலைமையில் சிறுவர் சிறுமிகள் வெள்ளை நிற உடை அணிந்து கைகளில் வெள்ளை நிற மெழுகு திறனை ஏந்தி பயபக்தியுடன் திருப்பலியில் பங்கு பெற்றனர் மேலும் இந்த நிகழ்வில் 32 சிறுவர் சிறுமிகளுக்கு பொது நன்மை உறுதி பூசுதல் நடைபெற்றது.
இதில் ஆயர் அவர்கள் ஒவ்வொரு குழந்தைக்கு நெற்றியில் பிளாஸ்மா இன்னும் புனிது தைலத்தில் சிலுவை இட்டு ஆசி வழங்கினார் இந்த சிறப்பு திருப்பலியில் முதன்மை பங்கு தந்தை அருள்ராஜ். மற்றும் தந்தையர்கள் . அருள் சகோதரிகள். பங்கு பேரவையினர் அன்பின் பொறுப்பாளர்கள். பங்கு இறைமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.