இக்கூட்டத்திற்க்கு முன்னாள் எம்.எல்ஏ. வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பிணர் முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், துனைத் தலைவர் கார்த்திகா, ஒன்றிய அவைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் துரைபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் பெண்களுக்காக இலவச பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய், ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் 2 ம் கட்ட திட்டம் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாயில் துவக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை இரண்டே ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சாதித்து காட்டியுள்ளார் என பேசினார். இக்கூட்டத்திற்க்கு பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் யதிந்தர் வரவேற்புரை ஆற்றினார்.
இந் நிகழ்ச்சியில் நகரஅவைத்தலைவர் செங்கல் மணி, துணை செயலாலர் மாதையன், பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துசாமி, ராஜா, நிர்வாகிகள் செழியன், மணிவண்ணன், பாரதி, செல்வம். பேரூராட்சி கவுன்சிலர்கள் கீதா, லட்சுமி, ரீனா, கார்த்திகேயன், அபிராமி, சிவகுமார், வெங்கடேசன், சுகந்தி மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.