Type Here to Get Search Results !

முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்.

கோப்பு படம்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும்‌ இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்‌ பொருட்டு "முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது” ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தினத்தன்று 15 முதல்‌ 38 வயது வரை உள்ள 3 ஆண்கள்‌ மற்றும்‌ 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது ரூ.1,00,000/- ரொக்கம்‌ பாராட்டு பத்திரம்‌ மற்றும்‌ பதக்கத்தை உள்ளடக்கியதாகும்‌. அதன்படி 2022ம்‌ ஆண்டிற்கான முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது எதிர்வரும்‌ 15.08.2023 அன்று நடைபெறும்‌ சுதந்திர தினவிழாவில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பான கீழ்காணும்‌ தகுதிகள்‌ வரையறுக்கப்பட்டுள்ளன.



  1. 15 வயது முதல்‌ 35 வயது வரையுள்ள ஆண்கள்‌/பெண்கள்‌ ஆகியோர்‌ விண்ணப்பிக்கலாம்‌. 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல்‌ வேண்டும்‌ அல்லது 31.03.2023 அன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல்‌ வேண்டும்‌.
  2. கடந்த நிதியாண்டில்‌ (2022-2023) அதாவது 01.04.2022 முதல்‌ 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள்‌ மட்டுமே பரிசீலிக்கப்படும்‌.
  3. விருதிற்கு விண்ணப்பிக்கும்‌ முன்பு குறைந்தபட்சம்‌ 5 வருடங்கள்‌ தமிழகத்தில்‌ குடியிருந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌. (சான்று இணைக்கப்படவேண்டும்‌)
  4. விண்ணப்பதாரார்கள்‌ சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. அவ்வாறு அவர்கள்‌ செய்த தொண்டு கண்டறியப்படக்‌ கூடியதாகவும்‌, அளவிடக்கூடியதாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.
  5. மத்திய 7 மாநில அரசுகள்‌, பொதுத்துறை நிறுவனங்கள்‌, பல்கலைக்கழங்கள்‌ 77 கல்லூரிகள்‌ 7 பள்ளிகளில்‌ பணியாற்றுபவர்கள்‌ இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
  6. விண்ணப்பதாரருக்கு உள்ளூர்‌ சமுதாய மக்களிடம்‌ செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில்‌ கணக்கில்‌ கொள்ளப்படும்‌.


மேற்காணும்‌ முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருதுபெற 15 முதல்‌ 35 வயதிற்குட்பட்ட தகுதிவாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ https://sdat.tn.gov.in/ என்ற இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்‌. 


இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க கடைசி நாள்‌ மற்றும்‌ நேரம்‌ : 31.05.2023 மாலை 4.00 மணி எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்தி முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருதிற்கு விண்ணப்பிக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies