வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 மே, 2023

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.


மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு 2023-24ஆம் கல்வி ஆண்டிலாவது வழங்கும் வகையில் வன்னியர் இடஒதுக்கீடுச் சட்டத்தை தமிழக அரசு மே- 31ஆம் தேதிக்குள் நிறைவேற்றி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு, தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சின்னபங்குநத்தம் ஊராட்சி இராஜாகொல்லஅள்ளி கிராமத்திலுள்ள பொதுமக்கள் சுமார் 1000 பேர் இராஜாகொல்ல அள்ளி கிராமத்திலுள்ள தபால் நிலையத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் கடிதம் அனுப்பினர்.


இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.சி.சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கி.மணி, ப.பெ.சக்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலேசன், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் மாதப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாஇராஜசேகர், ஒன்றிய தலைவர் விஜிகுமார், ஒன்றிய அமைப்பு தலைவர் முருகன், ஒன்றிய அமைப்பு செயலாளர் இராஜசேகர், ஒன்றிய இளைஞர் சங்க பொறுப்பாளர்கள் வினோத்குமார், பெருமாள் உள்ளிட்ட பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad