Type Here to Get Search Results !

கோயில் நிலத்தை மீட்டு தர வேண்டும்; தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் புகார் மனு.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட முள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் நேற்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பந்தாரஅள்ளி ஊராட்சி மற்றும் வருவாய் கிராமம் முள்ளனூரில் அருள்மிகு கோட்டை செல்லியம்மன் திருக்கோயில் உள்ளது. 

இக்கோயிலுக்கு  சொந்தமான நிலத்தை தனியார் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் மேற்படி  கோட்டை செல்லியம்மன் திருக்கோயில் நிலங்களை பட்டா மற்றும் பத்திரப்பதிவு மூலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டதை ரத்து செய்து தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இக்கோயில் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies