Type Here to Get Search Results !

11 மாத சம்பள தொகையினை பெற்று தர வேண்டும்; மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்ட  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக பொது வாழ்வு திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் கழிவறைகளை தினமும் தூய்மை பணி செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் இருக்கும் மேற்கண்ட பள்ளிகளில் நியமனம் செய்தனர். அதன்பின் இப்பணியை சிறப்பாக செய்து வருகிறோம். 

ஆனால் மாத மாதம் எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை.  கொரோனா காலத்தில் இரண்டு வருட சம்பளமும் கிடைக்கவில்லை. தற்பொழுது கடந்த 11 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் தூய்மைப்பணி செய்யும் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதனால் தாங்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களான எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies