தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது மாதமங்கலம்காலனி. இக்காலனியில் உள்ளது ஓங்காளியம்மன் திருக்கோயில். இக்கோயில் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றுடன் விழா துவங்கியது. நேற்று ஊர்அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்ததது. விழாவின் முக்கிய நிகழ்வாக சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது.


இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஏராளமான பெண் பக்தர்கள், ஓங்காளியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர், நாளை மாவிளக்கு ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. 26 ஆம் தேதி மஞ்சள் நீராடுதலுடன் கோயில் விழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்,