தொடர்ந்து 7-ம் தேதி உற்சவர் கோவிலுக்கு வருதல் நிகழ்ச்சியும், 8-ம் தேதி அக்னி குண்டம் மிதித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 12-ஆம் தேதி போலிசோறு போடுதல் நிகழ்ச்சி மற்றும் ஆரைக்கால் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. 22 ஆம் தேதி உற்சவர் வெளியே வருதல் நிகழ்ச்சியும், கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதல்நாள் காளியம்மன் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று 22-ம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து 2-ம் நாள் காளியம்மன் தேரோட்ட விழா நிகழ்ச்சி வெகுவிமர்சியாக இன்று நடைபெற்றது.


இதில் மாக்கனூர், மூக்கனஅள்ளி, வீரசெட்டிஅள்ளி, பூச்செட்டிஅள்ளி, பேடறஅள்ளி, சோளப்பாடி, தளவாய்அள்ளி, ஒசல்லிபுதூர், ஆலமரத்துப்பட்டி, திகிலோடு, மன்னேரி மாங்காப்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை 24-ம் தேதி பந்தகாசி விழா மற்றும் மஞ்சள் நீராடுதலுடன் கோயில் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.