மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், மறைந்த வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குரு அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க அலுவலகத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்றார்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், பாமக மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மு.பாலாஜி, வன்னியர் சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் பெ. சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், தேர்தல் பணிக்குழு மாவட்ட தலைவர் வாசுநாயுடு, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலர் கார்த்திகேயன், தருமபுரி நகர செயலாளர் கி.வெங்கடேசன், முன்னாள் நகர செயலாளர்கள் செல்வராஜ், கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணன், கனல் சிவா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.