Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலத்தில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதல்வர்  அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, இளைஞர் பாசறை செயலாளர் மாதுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக தொண்டர்கள்  பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழக்க  ஆரவாரமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு  கேக் வெட்டி, சிக்கன் பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், கோபால், வக்கில் செந்தில், கிளை செயலாளர் கோபால், தகவல் தொழில் நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, நிர்வாகிகள் பாரதி,  தங்கவேல், முருகன், ராமமூர்த்தி, துரை, ராமசந்திரன், ஸ்ரீதர் மற்றும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies