Type Here to Get Search Results !

மகேந்திரமங்கலம் கிராமத்தில் கணவன் சந்தேகப்பட்டதால் காதல் மனைவி கைக்குழந்தையுடன் மாயம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது. 24) இவர் அதே பகுதியில் மளிகை கடைநடத்தி வருகிறார், இவர் கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டியை சேர்ந்த சுஜி (வயது.19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர்களுக்கு 1 வயதில் தர்னிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுஜி அடிக்கடி செல்போனில்  பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு  மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தவர் நேற்று மனைவி செல்போனில் பேசிக் கொன்டிருந்த போது செல்போனை பிடுங்கி பார்த்துள்ளார், அப்போது மனைவி அவரது அம்மாவிடம் பேசி கொண்டிருந்தது தெரிந்தது.


கணவரின் இந்த செயலால் மணமுடைந்த மனைவி கைக்குழந்தையுடன் மாயமானார், எங்கு தேடியும் கிடைக்காததால் மனைவி மற்றும் குழந்தையை கண்டுபிடித்து தர கணவர் மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாயும், குழந்தையையும் தேடி வருகின்றனர்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies