Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மே தின எழுச்சி பேரணி பொதுக்கூட்டம்.


தர்மபுரி மாவட்டத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாபெரும் மே தின எழுச்சி பேரணி தர்மபுரி கிருஷ்ணகிரி சாலை ரோட்டரி ஹால் அருகில் இருந்து BSNL அலுவலகம் வரை இந்த பேரணி நடைபெற்றது.

 

இப்பேரணி கூட்டத்தில்  தர்மபுரி மாவட்ட AITUCஅமைப்பின் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நலசங்கம், முனிசிபல் பஞ்சாயத்து பொதுப்பணியாளர்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி, OHT இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், போன்ற உழைக்கும் வர்க்கத்தினர்கள் இதில்பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.


முக்கிய கோரிக்கையாக கொசு  ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம், கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும், மாதம் 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இப்பேரணி பொதுக்கூட்டத்தில் மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர் CPI, ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வுரிமை இயக்கம்), நா. நஞ்சப்பன் Ex MLA CPI (தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்), எஸ். தேவராசன் CPI (மாநில நிர்வாக குழு உறுப்பினர்), எஸ். கலைச்செல்வம் (வழக்கறிஞர் மாவட்ட செயலாளர்  CPI), K.மணி AITUC (மாநிலத் துணைத் தலைவர் ), R.சுதர்சனன்AITUC (மாவட்டத் துணைத் தலைவர்), R.நடராஜன்AITUC (மாவட்ட துணை செயலாளர்), A. முருகன் AITUC(மாவட்ட பொருளாளர் ), சின்னபையன் DBC (கொசு ஒழிப்பு பணி மாவட்ட பொருளாளர்), மொரப்பூர், இராமியணஹள்ளி, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், போன்ற அரசு மருத்துவமனையில் பணியாற்றும்  கொசு ஒழிப்பு பணியாளர்கள்    மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இப்பேரணி பொதுக்கூட்டத்தில் 500மேற்பட்ட உழைக்கும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies