Type Here to Get Search Results !

பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் - விவசாயிகள் மகிழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, அமானிமல்லாபுரம், பெல்ரம்பட்டி, காரிமங்கலம், அத்திமுட்லு, சாஸ்திர முட்லு, கும்மானூர், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். 

தொடர் மழை பெய்ததால்  தேங்காய் உற்பத்தி அதிகரித்த நிலையில் பாலக்கோடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக இருப்பதினால் மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் 108.60 ரூபாய்க்கு அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நடைபெறும் எனவும் ஒரு மாதத்திற்குள் 100 முதல் 200 டன் வரையிலும் அதிகபட்சமாக ஆயிரம் டன் வரையிலும் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனவும்  விவசாயிகள் பயனடையுமாறு வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார். 


கொப்பரை தேங்காய் கொள்முதலின் போது வேளாண்மை மேற்பார்வையாளர் பிரியா,  வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், சத்யா, முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies