தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்து சட்டையம்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார் தமிழ்நாட்டில் 10 லட்சம் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 43 அரசு கூட்டுறவு மற்றும் தனியார் கரும்பாலைகளுக்கு கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

- கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடும்போது தொழிலாளர்களின் உடல்களில் ஏற்படும் சிராய்ப்பு, உடலில் எரிச்சல் ஏற்பட்டு தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் தாக்கப்பட்டு சிரமப்படுகிறார்கள் எனவே பாதுகாப்புடன் கூடிய சீருடை, காலணி ரப்பர் ஷூ இலவசமாக வழங்க வேண்டுமென்றும்
- கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே வழங்க வேண்டுமென்றும்
- கரும்பு வெட்டும் போது ஏற்படும் விபத்திற்கும் விஷத்திற்கும் மருத்துவ செலவினத்தை அரசும் ஆலை நிர்வாகமும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும்
- குழு காப்பீடு திட்டத்தை அமுல்படுத்திடவும் பிரீமியம் தொகையை ஆலை நிர்வாகமே செலுத்திட வேண்டும் என்றும்
- கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு இருக்கும்போது விஷ பூச்சிகள் மற்றும் பாம்பு கடித்து தொழிலாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.
என்று பல்வேறு கோரிக்கைகள் இக்கூட்டத்தில் கோரிக்கை வைத்து தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன, இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டதுணைத் தலைவர் பழனி கொத்துக்காரர் வடிவேல் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்
.gif)

