தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியிலிருந்து விலகி பாஜகாவில் இணையும் விழா ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமையில் நடைப்பெற்றது.
இதில் அமானி மல்லாபுரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜாக மாவட்ட துனைத் தலைவர் முரளி முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகாவில் இணைத்து கொண்டனர். கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து, உறுப்பிணர் அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே.சிவா, முன்னாள் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் சண்முகம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் பார்த்திபன், மாவட்ட பொருளாளர் இராமன், ஒன்றிய செயலாளர் அருள் பாண்டியன், பாலக்கோடு மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் நிர்வாகிகள் ராஜன் பாபு, சக்தி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக