Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பாமக சார்பில் கோடைகால கிரிக்கெட் திருவிழா.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாமக சார்பில் கோடைகால கிரிக்கெட் திருவிழா பாமக நகர செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைப்பெற்றது.


இதில்  சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம்,  டாக்டர் .பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


இதில் கோடை விடுமுறை  காலத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் நல்வழிபடுத்தும் விதமாக பாமக மாநில தலைவர் அன்புமணிராமதாசின் ஆலோசனைப்படி மாவட்ட அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் வீரர்களுக்கும் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களுடன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 986 அணிகளில், 14 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.


இந் நிகழ்ச்சியில் முன்னாள் பாமக நகர தலைவர் ராஜவேல், மாவட்ட துணைத் தலைவர் ராஜா நகர தலைவர் ராஜா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிலம்பு ரத்னவேல் சந்தோஷ் மற்றும்  டைமன் கிரிக்கெட் கிளப் வடிவேல் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies