Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்ட அதியமான் அனைத்து வாகன விற்பனையாளர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை.


தர்மபுரி மாவட்ட அதியமான் அனைத்து வாகன விற்பனையாளர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது, நடுத்தரக் குடும்பத்தினரும், ஓரளவு ஊதியம் பெறுவோரும் இருசக்கர வாகனப்பயன்பாட்டை கடந்து தற்போது கார் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

இதில், பெரும்பாலானோர் தங்களுடைய நிதிநிலை கருதி, புதியதாக கார்கள் வாங்குவதைக் காட்டிலும் பழைய(யூஸ்டு) கார்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். இவற்றிற்கு பிரதான காரணம், புதிய கார்களின் விலையை விட குறைவான விலையில், பழைய கார்கள் கிடைக்கும் என்கிற எண்ணமேயாகும். மேலும், தாங்கள் நினைக்கும் பழைய கார்களுக்கும் கடனுதவி கிடைப்பதாலும், அவற்றின் பக்கம் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் செல்கின்றனர்.


தருமபுரி நகரைப் பொருத்தவரை பழைய கார்கள் தேவைப்படுவோர், முன்பெல்லாம் சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இடைத்தரகர்கள் வழியாகச் சென்று பழைய கார்களை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இவற்றிற்கு கிடைத்துள்ள வரவேற்பை கண்ட வியாபாரிகள், தருமபுரி நகரில் சில பழைய கார்கள் விற்பனை நிலையத்தை துவங்கி விற்பனை செய்து வருகின்றனர். 


இப்படி துவங்கப்பட்ட கார் விற்பனையாளர்கள் ஒன்று சேர்ந்து தர்மபுரியில், அதியமான் அனைத்து வாகன விற்பனையாளர் நல சங்கம் என்று தங்களுக்குள் ஒன்றிணைந்து கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்ட அதியமான் அனைத்து வாகன விற்பனையாளர்கள் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை  முனியப்பன் கோயில் எதிரில் உள்ள 7 ஹில்ஸ் கார் விற்பனையகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.வி செந்தில், மாவட்ட பொருளாளர் ஜி.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில், இந்திய அஞ்சல் துறை சார்பில்  அதிகாரிகள் கலந்து கொண்டு விபத்து காப்பீட்டின் நன்மைகளை சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தினர். அனைத்து சங்க உறுப்பினர்களும் விபத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் செயற்குழு தலைவர் ஏ.எம்.பழனி, மாவட்ட துணை செயலாளர் கே.ஆர்.கஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ஏ.கமால்பாஷா, நகர செயலாளர் வெங்கடேஷ், நகர தலைவர் டாலி கே.ரவிச்சந்திரன், சங்க பேச்சாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies