Type Here to Get Search Results !

ஏபிஜேயின் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை  அடுத்துள்ள சி புதூரில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏபிஜேயின் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு பாண்டுரங்கன் தலைமை வகித்தார்.ஏபிஜேயின் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் நாகராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். கவுன்சிலர் தனலட்சுமி முருகன், வார்டு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பாக அரசு மருத்துவர் அருண் பிரசாத், ஏபிஜேயின் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் அரவிந்த் பொருளாளர் வினோத் குமார், முன்னாள் தலைவர்கள் சக்திவேல், சாந்தமூர்த்தி, முன்னாள் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏபிஜேயின் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி  மன்றத்தின் நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies