Type Here to Get Search Results !

பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட மாங்கரை ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களான கூத்தப்பாடி, மாங்கரை, செங்கனூர், சத்தியநாதபுரம் பருவதன அள்ளி மற்றும் பல கிராமங்களில் மே ஒன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் எங்கள் ஊரில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் இதுவரை செய்யப்பட்ட வேலைகள் குறித்தும் பேசப்பட்டது. 

மாங்கரை ஊராட்சி நல்லாம்பட்டி பகுதியில் கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் பங்கேற்று கிராம மக்களிடையே குறைகளை கேட்டார் அப்பொழுது அங்குள்ள மக்கள் மின்விளக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோரிக்கை வைத்தனர், இந்த கோரிக்கைகளை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்த கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மருத்துவ அலுவலர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies