Type Here to Get Search Results !

தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்.


தமிழக விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட ஆலோசனை கூட்டம்  வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் எஸ் ஏ சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், மாநில செயலாளர் சின்னசாமி, மாநில ட்ராக்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் மகாராஜன், தர்மபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், நாகராஜ், முனிராஜ், சுப்பிரமணி, லோகநாதன், குமார், ஞானவேல், மாரியப்பன், பழனி, செல்வம், மாது, பரமசிவம், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் மாது, மணி, விஸ்வநாதன், சேலம் மாவட்ட செயலாளர் பெரியண்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் பால் உற்பத்தி செலவு கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 42ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 52ம் கொள்முதல் விலை உயர்வு வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம், பால் உற்பத்தியாளர் நலச்சங்கம், பணியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகள் கோரிக்கையை அலட்சியப்படுத்தி ஆவின் நிறுவனத்தை அழிக்க முயலுகிறது. 

எனவே பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, சென்னை கோட்டை முன் வரும் மே மாதம் 26 ஆம் தேதி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies