தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் அரூரில் நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேடம்மாள் கோ.சந்திரமோகன் வே.சௌந்திரராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.பழனியப்பன் ஒவ்வொரு ஊராட்சியிலும் கிளைகள் இல்லாத கிராமங்களில் புதிதாக கிளைகளை கட்டி வைக்க வேண்டும். ஒரு கிளைக்கு 25 பேர் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 15 பேர் இருக்கலாம், 20 பேர் கூட இருக்கலாம். அதனால் கிளைகள் இல்லாத இடங்களில் பொறுப்பாளர்கள் அமர்ந்து புதிய கிளைகளை கட்டி அமைக்க வேண்டும். அதற்கு தேவையான விண்ணப்பங்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் ஒன்றிய செயலாளர்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் திமுக நிர்வாகிகள் சுறுசுறுப்பாக உறுப்பினர் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக