Type Here to Get Search Results !

பாலமனேரியில் குடிக்க பணம் தராததால் மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பாலமனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமன் (வயது .60)இவர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் இவருக்கும்,  இவரது மனைவிக்கும்  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது,


கடந்த 4ம் தேதி  மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு உள்ளார், மனைவி பணம் தர மறுத்ததால் விரக்தியில் இருந்த ராமன் அன்று மாலை மாமரத்திற்க்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.


இதனை கண்ட குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies