Type Here to Get Search Results !

சட்ட விரோதமாக அரசு மதுபானம் விற்பனை செய்த பெண் கைது; 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 237 மதுபாட்டில்கள் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கள்ளதனமாக  அரசு மதுபானங்களை  சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து அவர்களுக்கு புகார்கள் சென்றன.


டி.எஸ்.பி உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர், பாலக்கோடு அருகே குத்தல அள்ளியில் ருக்கு (50) என்பவர்  வீட்டில் வைத்து அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு  விற்பனை செய்தது தெரிய வந்தது, அவரை  கைது செய்து அவரிடமிருந்த பிராந்தி, பீர்  பாட்டில்கள் என 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 237 மதுபாட்டில்கள் பறிமுதல்  செய்து. ருக்குவை கைது செய்துசிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies