Type Here to Get Search Results !

ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு.


R. கோபிநாதம்பட்டி ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி, போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்லூரி இணை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடையே போதைப்பொருள் குறித்தும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் இரா.கணேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினராக மொரப்பூர் காவல்  ஆய்வாளர் வான்மதி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சேகர் அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியரிடம் போதைப்பொருள் குறித்தும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வோடு எவ்வாறு இருப்பது என்பதை பற்றியும் எடுத்து உரைக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில்  துறைத்தலைவர்கள் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies