Type Here to Get Search Results !

வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் திட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டம் (SMAM) 2022-23 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 100 எண்கள் வழங்க ரூ.85.00 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

அதன் படி தருமபுரி மாவட்டத்திற்கு 70 எண்கள் பொது பிரிவிற்கும் 30 எண்கள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய பிரிவிற்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50% மானியமும் இதர பிரிவினருக்கு 40% மானியமும் வழங்கப்பட உள்ளது. இதில் SC/ST பிரிவில் சிறு / குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்பட உள்ளது.


இத்திட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் (AGAMT 2022-23) உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார்கார்டு நகல் மற்றும் வங்கி பாஸ்புத்தக நகல் ஆகியவற்றுடன் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  1. உதவிசெயற்பொறியாளர்(வேபொ), வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி. தொலைபேசி எண் : 04342 296132
  2. உதவிசெயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அரூர், தருமபுரி மாவட்டம் தொலைபேசி எண் : 04346296077

என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆம், அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies