பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் கொலசன அள்ளி ஊராட்சி வேப்பல அள்ளி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது.
இக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முருகன், மாரண்ட அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், சண்முகம், சரிதா குமார், அண்ணாமலை, துரை, முத்துராஜ், ஜெகநாதன், வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் பேர்ணாம்பட்டு ராஜேந்திர பிரசாத் இரண்டு ஆண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்திற்க்கு ஒன்றிய அவைத் தலைவர் முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
இந் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குட்டி(எ)வெங்கடேசன், முருகன், தொண்டரனி குமார், கும்மனூர் தேவராஜ், சாதன், சிவக்குமார், மாணவரணி மணிவண்ணன், ஊராட்சி மன்ற து.தலைவர் தருமன், கவுன்சிலர் சிவக்குமார், புதூர் முத்து, சந்ரு, சூடப்பன், மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)


