Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே யானை தாக்கி படுகாயம் அடைந்த முதியவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுதல்.


பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி பகுதியினை  சேர்ந்த வர் பெரியண்ணன் (வயது 72). விவசாயி. இவர் தனது விவ சாய நிலத்தில் இருந்தபோது காட்டு யானை அவரை தாக்கிவிட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த இவர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த பா.ம.க. கவுரவ தலைவரும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி  மருத்துவமனைக்கு நேரில் சென்று யானை தாக்கி படுகாயம் அடைந்த பெரியண்ணணை சந்தித்து ஆறுதல் கூறினார். 

மேலும் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மேற் கொள்ளுமாறு டாக்டர்களுக்கு வழியுறுத்தினார் . இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்   பென்னாகரம் ஒன்றி யக்குழு தலைவர் கவிதா இராமகிருஷ்ணன் பா.ம.க.மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies