Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரில் 4 வார்டுகளில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை.

 


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில்  புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மாதம் 2ம் தேதி  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.



அதனை தொடர்ந்து இன்று தீர்த்தகிரி நகரில் உள்ள 18, 14, 6,4ஆகிய நான்கு வார்டுகளுக்கு 89 இலட்சம்  ரூபாய் மதிப்பீட்டில்  புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் மோகன் மற்றும்  கட்சி நிர்வாகிகள்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies