Type Here to Get Search Results !

நல்லம்பள்ளி அருகே விபத்துக்களான அரசு பேருந்தில் பயணித்து காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் SP.வெங்கடேஸ்வரன். MLA.


பென்னாகரம் வட்டம், மஞ்சநாய்க்கன அள்ளி பகுதியில் இருந்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்  நாகர்கூடல் ஊராட்சி, நாகர்கூடல் கிராம வழித்தடத்தில் பயணிகளை ஏற்றி தருமபுரி நகரத்திற்கு நகர பேருந்து எண் 40 வந்துக்கொண்டிருந்தநாகர்கூடல் அருகே வந்தப்போது பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். 

விபத்து நடந்த தகவலை அறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் மருத்துவமனைக்கு சென்று தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி மற்றும் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.காந்தியுடன் சேர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை உதவிகளையும் வழங்க முதல்வரிடமும், மருத்துவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். 


பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ. பெரியசாமி, எர்ரபையனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன், நாகர்கூடல் ஒன்றிய கவுன்சிலர் காளியப்பன், மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies