வயர்மேன் பிரிவிற்கு 8ஆம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேசன் & AC டெக்னீசியன், பிட்டர், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது : கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியன அசல் சான்றிதழ்களுடன் கொண்டு வரவேண்டும்.


விண்ணப்ப கட்டணம் மற்றும் இதரக்கட்டணம் ரூ 245/- ஆகும் பயிற்சி கட்டணம் இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபட கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளோர்க்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
மேலும் பயிற்சி முடித்தபின் (Campus Interview) வளாகத் தேர்வு மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைப் பெற்று பெற்று தரப்படும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை நேரிலோ அல்லது 9443470656, 7548844547 மற்றும் 9488853102 ஆகிய கைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.