Type Here to Get Search Results !

கடகத்தூர் ஊராட்சியில் மே 1, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் கடகத்தூர் ஊராட்சியில் மே 1, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ஊராட்சியில் அரசு சார்பில் கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் அறிந்து பயன்பெறவும், கிராமங்களிலுள்ள பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நிறைவேற்ற வழிவகை செய்யும் வகையில், ஊராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர் தீபனாவிஸ்வேஸ்ரி, ஊராட்சி மன்றத் தலைவர் இரா.ஐவண்ணன், துணைத் தலைவர் சங்கீதா, ஊராட்சி செயலாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இலக்கியா மற்றும் வார்டு உறுப்பினர்கள், வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies