Type Here to Get Search Results !

சின்னபள்ளத்தூர் கிராமத்தில் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு பல்வேறு பயனுள்ள பயிற்சிகள்.


கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள், உணவு முறைகள், வாழ்வியல் முறைகள், உள்ளிட்டவைகளை கொண்டு சேர்க்கும் நோக்கோடு குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் உள்ளிட்ட நிகழ்வுகள்  சின்னப்பள்ளத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

முன்னதாக கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தையும் கணிதத்தில் நாட்டத்தையும் ஏற்படுத்த எங்கும் அறிவியல் யாவும் கணிதம் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதில் அறிவியல் சோதனைகள் கணித புதிர்கள், வார்த்தை விளையாட்டு, மேஜிக் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை வானவில் மன்ற கருத்தாளர் பிரியா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இலக்கியா, ராஜேஸ்வரி, மங்கம்மாள், ஜெயந்தி கலைச்செல்வி  உள்ளிட்டோர் குழந்தைகளிடம் நிகழ்வுகளை செய்து காட்டினார்கள். பின்னர் மாணவர்களுக்கு கதை புத்தகங்களும் எழுது பொருட்களும்  தலைமை ஆசிரியர் மா. பழனி வழங்கினார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies